முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நெருக்கடி : பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்(Chavakachcheri Base Hospital) புதிதாக அத்தியட்சகர் கடமைக்கு வந்த பின்னர் அங்கு பணிபுரிபவர்களால் எனக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் நேற்று(05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார்.

தொடர்பான விசாரனைகள்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நெருக்கடி நிலமை ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் R.அச்சுதன் கடந்த மாதம் 14 ஆம் திகதி
நியமிக்கப்பட்டார்.

நான் அங்கு இரண்டு தடவைகள் சென்றுள்ளேன். அங்குள்ள வைத்தியர்கள் தாதியர்கள்
நன்றாக வேலை செய்கின்றனர்.

ஆனால் புதிதாக அத்தியட்சகர் கடமைக்கு வந்த பின்னர் அங்கு பணிபுரிபவர்களால்
எனக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

அது தொடர்பில் அனைத்து உயர் அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளேன்.

குறித்த விடயம்
தொடர்பான விசாரனைகள் இடம்பெற்று வருகின்றன. வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா
இராமநாதன் தற்காலிகமாக மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு இடமாற்றம்
செய்யப்பட்டு அவரின் பதவிக்கு வைத்தியர் ராஜீவ் அவர்களை நியமித்துள்ளோம்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நெருக்கடி : பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் | Crisis At Chavakachcheri Base Hospital

இருப்பினும் குறித்த நியமனத்தை வழங்கவிடாது வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுணா
இராமநாதன் தொடர்ந்தும் தான் பதவியில் இருக்க வேண்டும் என இருந்து வருகிறார்.

தற்போது அங்கே சில அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மின்பிறப்பாக்கி ஊடாக வைத்தியசாலைக்கான அவிருத்திக்கு மேற்கொள்வது தொடர்பான
விடயங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும் இவற்றை செய்ய விடாது
குறித்த அத்தியட்ச்சகர் முட்டுக்கட்டையாக இருந்து வருவதாக வடக்கு மாகாண
சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.