முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

7 மாதங்களில் 1000 பில்லியன் ரூபா வருமானத்தைக் கடந்த சுங்கத் திணைக்களம்

சுங்கத் திணைக்களம் 7 மாதங்களில் 1200 பில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானத்தைப் பெற்றுள்ளது என சுங்க பேச்சாளர் சீவலி அருங்கொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(02) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜூலை மாதத்தில் மாத்திரம் 231 பில்லியன் ரூபா அதிகூடிய வருமானம் கிடைத்துள்ளது.

அந்த வகையில் இவ்வாண்டு சுங்கத் திணைக்களத்துக்கான வருமான இலக்கை இலகுவாக அடைய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

116 பில்லியன் ரூபா அதிக வருமானம் 

2025 ஆகஸ்ட் முதலாம் திகதி வரை 1227 பில்லியன் ரூபா வருமானத்தை இலங்கை சுங்க திணைக்களம் வருமானமாகப் பெற்றுள்ளது.

7 மாதங்களில் 1000 பில்லியன் ரூபா வருமானத்தைக் கடந்த சுங்கத் திணைக்களம் | Customs Department Crosses 1000 Billion Revenue

கடந்த ஜூலை வரலாற்றில் முதன் முறையாக ஒரே மாதத்தில் அதிக வருமானமாக 231 பில்லியன் ரூபா சுங்கத் திணைக்களத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரே மாதத்தில் இவ்வாறு அதிகூடிய கிடைக்கப் பெற்றதில்லை. இவ்வாண்டு எமது வருமான இலக்கு 2115 பில்லியன் ரூபாவாகும். 

அந்த இலக்கில் தற்போது 1227 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

ஜூலை 31ஆம் திகதி வரை எட்டப்பட வேண்டிய இலக்கை விட 116 பில்லியன் ரூபா அதிக வருமானம் கிடைத்துள்ளது.

இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு

வாகன இறக்குமதியூடாகவே அதிக வருமானம் கிடைத்துள்ளது. அந்த வகையில் வாகன இறக்குமதியூடாக 300 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

7 மாதங்களில் 1000 பில்லியன் ரூபா வருமானத்தைக் கடந்த சுங்கத் திணைக்களம் | Customs Department Crosses 1000 Billion Revenue

28 000க்கும் அதிக வாகனங்கள் இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதே நிலைமை தொடர்ந்தும் காணப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு அப்பால் இறக்குமதி செய்யப்பட்ட வாகனமொன்று மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இறக்குமதி கட்டுப்பாட்டு சட்டத்துக்கமையவே அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமதத்துக்கு சுங்கத் திணைக்களம் மாத்திரமே காரணமல்ல.

ஏனைய நிறுவனங்கள், திணைக்களங்களில் பங்களிப்பும் அதில் உள்ளது.

எனவே அனைத்து தரப்பினரும் இணைந்து முறையாக செயற்படும் பட்சத்தில் கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்படக் கூடிய தாமதத்தை தவிர்த்துக் கொள்ளலாம் என்றார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.