கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் உதவி பணிப்பாளர் சுலோச்சனா
ஹெட்டியாராச்சிக்கு எதிராக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில்,கெசல்வத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை அளிக்குமாறு கொழும்பு
பிரதான நீதிவான் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவர் பொலிஸ் நிலையத்தில், நேற்று மாலை முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
கொலை மிரட்டல்
ஹெட்டியாராச்சி மற்றும் விசாரணை அதிகாரி திலும் துஷாந்த ஆகியோர் நடவடிக்கைகள்
முடிந்து நீதிமன்ற அறையை விட்டு வெளியேறும் போது நீதிமன்ற வளாகத்திற்குள் இந்த
சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்திலிருந்து வெளியேறும் போது, வழக்கு ஒன்றின்
பிரதிவாதி ஒருவரின் மகள் அவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக ஹெட்டியாராச்சி, கொழும்பு பிரதான நீதிவானுக்கு இந்த சம்பவம் குறித்து
தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே, அவர் வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில், முறையான முறைப்பாட்டை
அளிக்குமாறு நீதவான் அறிவுறுத்தினார்.

