முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ட்ரம்பை தொடர்ந்து இலங்கையை குறி வைத்திருந்த ஈரானிய உளவாளி!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது டொனால்ட் ட்ரம்பை (Donald Trump) படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய சந்தேகநபர் இலங்கையில் உள்ள இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பாரிய துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்டிருந்தமையை அமெரிக்க நீதித்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

சம்பவம் தொடர்பில் அமெரிக்காவின் (US) மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் 51 வயதான ஃபர்ஹாத் ஷகேரி என்பவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

ட்ரம்பை கொலை செய்யும் திட்டம்

இந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஷகேரி கைது செய்யப்படவில்லை என்றும் ஈரானில் தலைமறைவாகியிருக்கலாம் என்றும் அமெரிக்க அரசாங்கம் நம்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

ட்ரம்பை தொடர்ந்து இலங்கையை குறி வைத்திருந்த ஈரானிய உளவாளி! | Doj Charges Iranian Plot To Kill Donald Trump

ஈரானின் புரட்சிகர காவலர் அதிகாரி ஒருவர், ட்ரம்பைக் கண்காணித்து ஏழு நாட்களுக்குள் கொல்லும் திட்டத்தை வகுக்கும்படி, செப்டம்பரில் ஷகேரிக்கு உத்தரவிட்டதாக குறித்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஷகேரி அந்த ஏழு நாள் காலக்கெடுவிற்குள் டிரம்பைக் கொல்லும் திட்டத்தை ஏற்க ஷகேரி மறுத்தமையால் ஈரானிய புரட்சிகர காவலர் அதிகாரிகள் திட்டத்தை இடைநிறுத்தியதாக குற்றப்பத்திரிகையில் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை தாக்குதல்

இவ்வாறானதொரு பின்னணியில், இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல்களுக்கு ஒரு வருடம் கழித்து, 2024 ஒக்டோபரில் இலங்கையில் உள்ள இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பாரிய துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிடுமாறு ஈரானிய தொடர்புகள் ஷகேரியிடம் கூறியுள்ளதாக வழக்கறிஞர்கள் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

ட்ரம்பை தொடர்ந்து இலங்கையை குறி வைத்திருந்த ஈரானிய உளவாளி! | Doj Charges Iranian Plot To Kill Donald Trump

மேற்படி, குறித்த தாக்குதல் அச்சுறுத்தல், இலங்கையில் இஸ்ரேலிய பயணிகளை எச்சரிக்க அமெரிக்காவை தூண்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்