மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தை 12 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும் அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் காவல்துறையினரால் இரத்து செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம் என அனைத்து சாரதிகளையும் இலங்கை காவல்துறையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
விசேட போக்குவரத்து நடவடிக்கை
கடந்த 24 மணித்தியாலங்களில் நடைமுறைபடுத்தப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போதே காவல்துறையினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, இன்று (26.12.2024) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 395 மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.