கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தம்பதி 3 வருடங்களுக்கு முன்னர் 1.6 பில்லியன் ரூபா நிதி மோசடி செய்து படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த தம்பதி மீண்டும் நாட்டிற்கு வர முயன்ற வேளையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்பதி கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தின் கணினி பிரிவில் இணைக்கப்பட்ட ஆவணங்களுக்கமைய குறித்த தம்பதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.