யாழில் (Jaffna) மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வல்வெட்டித்துறை (Valvettithurai) – ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய இரட்ணவடிவேல் இரவீந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த 11ஆம் திகதி, உயிரிழந்த முதியவர் வீதியோரமாக சைக்கிளை நிறுத்திவிட்டு இன்னொருவருடன் கதைத்துக் கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவரை மோதியுள்ளது.
மரண விசாரணை
இதையடுத்து, மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (14.04.2025) உயிரிழந்துள்ளார்.

அத்துடன் அவரது சடலம் மீதாக மரண விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளார்.
மேலும், இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் உட்பட மேலும் இருவர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

