கிளிநொச்சியில் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த செயலமர்வு, நேற்றையதினம்(11.03.2025) தனியார் விடுதியொன்றில் நடைபெற்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் தேர்தல் வன்முறைகளை கண்கணிப்பதற்கான
நிலையத்தினால் இந்த செயலமர்வு நடாத்தப்பட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்பாளர்கள்
இந்தச் செயலமர்வில் பொலிஸார், அரசியல் கட்சிகளின்
பிரதிநிகள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.