முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தல்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் வேண்டும்: பசில் ராஜபக்ச கோரிக்கை

அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும்(Ranil Wickremesinghe) சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையிலான மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த பேச்சுவார்த்தையானது நேற்று(23) பிற்பகல் அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி பேச்சுவார்த்தையில் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) சுட்டிக்காட்டியுள்ளார்.

எழுத்துபூர்வமாக கோரிக்கை

அத்தோடு மே தினத்திற்கு பின்னர் அதிபர் தேர்தல் பிரசாரங்களை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் டிரான் அலஸ்(Tiran Alles) குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் வேண்டும்: பசில் ராஜபக்ச கோரிக்கை | Election Talks Between Basil And Rajapaksa

ரணில் விக்ரமசிங்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் அதற்கு ஆதரவைப் பெற்றுக் கொள்ள அனைத்துத் தரப்பினரிடமும் எழுத்துபூர்வமாக கோரிக்கை விடுப்பதே சிறந்தது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான பணி

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் டலஸ் அழகப்பெரும குழுவினர் உள்ளிட்ட கட்சிகளை மீளக் கொண்டு வருவதற்கும் ஆதரவை பெறுவதற்கு பிரதமரின் தலையீடு அவசியம் எனவும் பசில் ராஜபக்ச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் வேண்டும்: பசில் ராஜபக்ச கோரிக்கை | Election Talks Between Basil And Rajapaksa

எவ்வாறாயினும், இறுதியில் அரசாங்கமானது பெரும்பாலான பணிகளை மேற்கொள்ள விரும்புவதால் அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுவை ஜூன் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, திரன் அலஸ் மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/election-talks-between-basil-and-rajapaksa-1713932259

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.