இலங்கை மின்சார சபையின் (Ceylon Electricity Board) மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ விடுப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
கொழும்பில் (Colombo) நேற்று (21.07.2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, 28 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று இலங்கை மின்சார சபை தலைமை அலுவலகம் முன் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இலங்கை மின்சார சபை
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்புக்காக அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தில் சில பிரிவுகளை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு சிறப்பு பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்பு தேவை என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் சபாநாயகருக்குத் தெரிவித்தது.

அதன்படி, குழு நிலையின் போது சட்டமூலத்தில் தொடர்புடைய திருத்தங்களைச் சேர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மின்சார திருத்த சட்டமூலம் மீதான இரண்டாவது வாசிப்பு விவாதம் நாளை மறுநாள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

