படையப்பா
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பங்காற்றிய நடிகர்களில் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது.

அதற்காக சமீபத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து திரையரங்கில் இதனை கொண்டாடும் விதமாக படையப்பா படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்கள்.

நாளை திரையரங்கில் வெளிவரவிருக்கும் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையரங்கில் வெளிவரும் இப்படம் கண்டிப்பாக மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரீ-ரிலீஸ் அட்டகாசம் படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா?
வசூல்
இந்த நிலையில், 1999ஆம் ஆண்டு படையப்பா திரைப்படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் வெளிவந்த 1999ஆம் ஆண்டு உலகளவில் ரூ. 63 கோடி வசூல் செய்தது. தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 29.8 கோடி மற்றும் தெலுங்கில் ரூ. 14 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

