ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்
செய்ய உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான முன்னுரிமைத் திட்டம் பிளஸ் (GSP+) வரிச்
சலுகைகளை மதிப்பிடுவதற்காகவே, இந்த குழுவின் விஜயம் அமையவுள்ளது.
இந்த தகவலை,வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (15) நாடாளுமன்றத்தில்
வெளியிட்டுள்ளார்.
தேவையான நிதி
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் நலன்களை மதிப்பிட்டே, ஐரோப்பிய
ஒன்றியம், GSP+ சலுகையை வழங்கி வருகிறது.

இதற்கிடையில், சைப்ரஸில் உள்ள இலங்கைத் தூதரகம் விரைவில் திறக்கப்படும்
என்றும், இதற்காக ஏற்கனவே தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் வெளியுறவு
அமைச்சர் கூறியுள்ளார்.

