மத்திய மாகாண ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகளை விளக்கும் கடிதம் ஒன்றை மத்திய மாகாண பிரதான செயலாளரின் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
ஆளுநரின் செயலாளரால் வெளியிடப்பட்ட கடிதத்தில் இவ்வாறான ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்காகத் தேவையான உத்தியோகபூர்வ நடைமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
புதிய நடைமுறைகள்
இதற்கமைய,தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழில் பாடப்பட வேண்டும், இவ்வாறான நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறபோது, நன்னாரி, வில்வம்பூ, ஆவாரம்பூ போன்ற உள்நாட்டு மூலிகை பானங்கள் வழங்கப்பட வேண்டும்.
ஆளுநர் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்வுகளும் வழக்கமான நிகழ்வுகளாக நடத்தப்பட வேண்டும், சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யக்கூடாது.
மேலும், மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து அமைச்சுகளும் நிறுவனங்களும், ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்காக இந்நடவடிக்கைகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.