இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் வரி செலுத்த வேண்டும் என்று தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த (A. Anil Jayanta) தெரிவித்துள்ளார்.
இது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இரண்டிற்கும் பொருந்தும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இன்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
சட்ட நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், “ வரி செலுத்துபவர்கள் இங்கு வதிபவர்களாக இருக்க வேண்டும் என்பதுடன் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ வருமானம் ஈட்டுபவராக இருக்க வேண்டும்.

இங்கு வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
டிஜிட்டல் துறையில் தனிநபர்களுக்கு மட்டும் வரி விதிப்பது சிக்கலானது. டிஜிட்டல் துறையை கருத்தில் கொண்ட பின்னரே இந்த 15% விகிதம் பயன்படுத்தப்பட்டது. இந்த வரி விகிதம் ஒருபோதும் நியாயமற்ற முறையில் விதிக்கப்படவில்லை” என தெரிவித்தார்.

