2026ஆம் ஆண்டுக்கான பரீட்சை அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தர சாதாரண தர பரீட்சை, 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 17ஆம் திகதி முதல் பெப்ரவரி 26ஆம் திகதி வரை நடைபெறும்.
2026ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை, அடுத்த ஆண்டு ஒகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிய நேரத்தில் பரீட்சைகள்
அதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, 2026ஆம் ஆண்டு ஒகஸ்ட் 09 அன்று நடைபெறும்.

அத்துடன், பொது தகவல் தொழில்நுட்ப(GIT) பரீட்சை, 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ஆம் திகதி இடம்பெறும்.

மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை, அடுத்த ஆண்டு டிசம்பர் 8 முதல் டிசம்பர் 17 வரை நடைபெறும்.

