பாகிஸ்தானில் (Pakistan) தந்தையே அவரது மகளை சுட்டுகொன்றமை சர்வதேச ஊடங்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த சிறுமி, டிக் டாக்கில் காணொளி வெளிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
ஆணவக்கொலை
இந்தநிலையில், இந்த விடயம் அவரது தந்தைக்கு பிடிக்கவில்லை என அவர் பலமுறை எச்சரித்துள்ளார்.
இருப்பினும் சிறுமி அதனை மறுத்த நிலையில், குறித்த சிறுமி வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த வேளை உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
எங்கிருந்தோ பாய்ந்து வந்த குண்டுபட்டு சிறுமி இறந்ததாக அவரது தந்தை தெரிவித்திருந்த நிலையில், காவல்துறையினர் நடத்திய நடத்திய விசாரணையில் தந்தையும் அவரது மைத்துனரும் சேர்ந்து சிறுமியை ஆணவக்கொலை செய்தது தெரியவந்ததுள்ளது.
இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.