மின்சார கட்டண உயர்வு காரணமாக உணவக உணவுப் பொருட்களின் விலை உயர்வடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார கட்டண உயர்வு காரணமாக தங்களது தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ஹோட்டல்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் எதிர்வரும் நாட்களில் அனைத்து வகை உணவுப் பொருட்களுக்கும் விலை உயர்வை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விலை உயர்வுகளை தவிர்க்க
“மின்சார கட்டணம் சகிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இது உணவகங்களை தொடர்வதற்கே சாத்தியமில்லாத நிலையை உருவாக்கியுள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் இந்த விவகாரத்தை கருத்திற் கொண்டால் இந்த விலை உயர்வுகளை தவிர்க்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களுக்கு சம்பளம், வாடகை, நீர் கட்டணம், மற்றும் மற்ற செலவுகளை எல்லாம் ஏற்க வேண்டியிருக்கும். இப்போது இந்த மின்சார கட்டண உயர்வு அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
இதனால் முட்டை, கோழி இறைச்சி போன்ற முக்கிய உணவுப் பொருட்களும் உயர்ந்துவிடும்” என ஹர்ஷன ருக்ஷான் மேலும் சுட்டிக்காட்டினார்.

