புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது
இந்தநிலையில் ,கைது செய்யப்பட்டவர்களை நாளை (19) மஹர நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவால் பயன்படுத்தப்பட்ட சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட பிராடோ ஜீப் வண்டி, பாகங்களாக பிரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட நிலையில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You May Like This..