முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்னவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வழக்கு இன்று (14) காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, உண்மைகளைக் கருத்தில் கொண்ட குருநாகல் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
கைதுக்கான காரணம்
அலவ்வ காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரை கடத்தி காணாமல் ஆக்கிய குற்றச்சாட்டின் பேரில் ஜூலை 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் முன்னாள் கடற்படைத் தளபதி கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில், முன்னாள் கடற்படைத் தளபதியைத் தவிர, முன்னாள் புலனாய்வுத் தலைவர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் மொஹோட்டி உட்பட மேலும் மூவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, குறித்த வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன 11வது சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது.

