இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 1888 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தமானது நேற்று (22) இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி அநுர கருணாதிலக்க ஆகியோர் தலைமையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
நிர்மாணிப்பதற்கான திட்டம்
குறித்த வீடுகள் பேலியகொட, தெமட்டகொட, மொரட்டுவ மற்றும் மஹரகம பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, மூத்த கலைஞர்களுக்கு 108 வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டமும் இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதற்காக, கொழும்பின் புறநகர் பகுதியான கொட்டாவ பிரதேசம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.