இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சில நிறுவனங்களின் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், சினோபெக் நிறுவனம் இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளது.
இதன்படி 355 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெட்ரோல் லீற்றரின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாகும்.
பெட்ரோலின் புதிய விலை
420 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றரின் விலை 41 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 379 ரூபாவாகும்.
377 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 355 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிபெட்கோ எரிபொருள் விலை
சிபெட்கோ நிறுவனம் எரிபொருள் விலையை இன்று (30) நள்ளிரவு முதல் மாற்றியமைத்துள்ளது.
இந்த திருத்தங்களின் கீழ், மூன்று வகையான எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, இரண்டின் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 41 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 379 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் விலை
ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டு 355 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
இதன்படி, டீசல் லீற்றர் ஒன்றின் விலை 317 ரூபாவாகவும் மண்ணெண்ணெய்யின் விலை 202 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.