இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் விமான எரிபொருள் விற்பனை 21 மில்லியன் லிட்டர்களால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விற்பனை
அதன்படி கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூரா நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் போட்டி விலைகளை பராமரிப்பதன் மூலம் இந்த விற்பனை அதிகரிப்பை எட்ட முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

