கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை கொழும்பு (Colombo) குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் மாதம்பிட்டிய காவல்துறை பிரிவில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற அறைகளை சுட்டிக்காட்டி கொலைக்கு ஆதரவளித்ததன் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் 23 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 14 சந்தேக நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.