கல்விப் பொதுத் தராதர (G.C.E.) உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மறுமதிப்பீட்டு (Recorrection) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைத் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் பரீட்சார்த்திகள் தங்களது பெறுபேறுகளைப் பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகியவற்றிற்கு விஜயம் செய்து பெற்றுக்கொள்ள முடியும்.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் அல்லது விசாரணைகளுக்குப் பின்வரும் தொலைபேசி எண்களின் ஊடாகப் பரீட்சைத் திணைக்களத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அவசர அழைப்பு எண்: 1911
- தொலைபேசி எண்கள்: 011 2784208 / 011 2784537
Source: https://ibctamil.com/article/gce-a-l-recorrection-results-examination-dept-ann-1783216624

