முதலாம் இணைப்பு
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நள்ளிரவில் வெளியாகி உள்ளன.
அந்தவகையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவனான கேதீஸ்வரன் கேசவன் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய இணைப்பு
2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன.

பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகள் doenets.lk/examresults தளத்தில் சுட்டெண் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும்.
பரீட்சை பெறுபேறுகள்
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த மே மாதம் ஆறாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெற்றது.
மேலும், இதில் மொத்தம் 452,979 விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/gce-ordinary-results-2023-released-1727551723

