முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜேர்மன் செல்லும் ஜனாதிபதி அநுர : காத்திருக்கும் சவால்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வதற்கும், நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கும், போர்க்கால பொறுப்புக்கூறல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஜேர்மன்(germany) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம்(anura kumara dissanayake) கேள்விகளை தொடுப்பார் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஜேர்மனி, பிற மேற்கத்திய சக்திகளுடன் சேர்ந்து, நீண்ட காலமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி வருகிறது.

நான்காவது அதிகாரபூர்வ விஜயம்

ஜனாதிபதி அநுர எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி ஜேர்மனிக்குச் செல்லவுள்ளார். இது நாட்டின் தலைவராகப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் நான்காவது அதிகாரபூர்வ விஜயமாகும்.

ஜேர்மன் செல்லும் ஜனாதிபதி அநுர : காத்திருக்கும் சவால் | Germany To Press Sri Lanka Pta Repeal Anura Visit

முன்னதாக, அவர் இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். தனது ஜேர்மன் பயணத்தின் போது, ​​வெளியுறவு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், பாதுகாப்பு அமைச்சர் கேத்தரினா ரீச் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

ஜேர்மன் சான்சலரை சந்திக்கமாட்டார் 

இருப்பினும், தற்போதைய அரசின் பிற அமைச்சரவை அமைச்சர்களுடனான சந்திப்புகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை . முதலீடுகள், இலங்கை ஏற்றுமதிக்கான சந்தையாக உள்ள ஜேர்மனி, திறமையான பணியாளர்களின் இடம்பெயர்வு மற்றும் தொழில் பயிற்சி போன்ற துறைகளில் மற்ற அமைச்சரவை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்த விஜயம் கதவைத் திறக்கும் என்று அறியப்படுகிறது.

ஜேர்மன் செல்லும் ஜனாதிபதி அநுர : காத்திருக்கும் சவால் | Germany To Press Sri Lanka Pta Repeal Anura Visit

ஜனாதிபதி அநுர ஜேர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸையும்(German Chancellor Friedrich Merz) சந்திக்க மாட்டார். அதற்கு பதிலாக, ஜனாதிபதி திசாநாயக்க, தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளபடி, ஜெர்மனியின் கூட்டாட்சித் தலைவர் பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியரைச் சந்திப்பார் என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.