வருமான வரி விலக்கு காரணமாக அரசாங்கத்திற்கு சுமார் 60 பில்லியன் ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வருமான வரி விலக்கு வரம்பு 12 லட்சம் ரூபாயில் இருந்து 18 லட்சம் ரூபாயாக அரசாங்கம் அதிகரித்தமையினால் இந்த நிலைமை ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த ஆண்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வழங்கிய வரி வருவாய் இலக்கு 2,195 பில்லியன் ரூபாவாகும் என திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஷாந்த தெரிவித்துள்ளார்.
வரி வருமானம்
வரி வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கும் வரி ஏய்ப்பு செய்பவர்களை பிடிப்பதற்கும் விரிவான திட்டத்தை செயல்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, வரி வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஷாந்த மேலும் தெரிவித்துள்ளார்.

