நாட்டில் சொத்து வரி (Property Tax) விதிப்பது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்கத்தின் வரி வருமானத்தை அதிகரிப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியம் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இந்த வரியை அறிமுகப்படுத்துமாறு பரிந்துரைத்திருந்தபோதிலும், கடந்த அரசாங்கத்தைப் போலவே தற்போதைய அரசாங்கமும் அதனை நடைமுறைப்படுத்துவதை அவ்வப்போது ஒத்திவைத்து வந்தது.
நாணய நிதியம்
எவ்வாறாயினும், இலங்கைக்குக் கிடைக்கவிருக்கும் அடுத்த கடன் தவணையை விடுவிப்பதற்கு முன்னர் அரசாங்க வருமானத்தை விரிவுபடுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்த சொத்து வரியை நடைமுறைப்படுத்த வேண்டும் எனச் சர்வதேச நாணய நிதியம் தற்போது வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வரி முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் இதுவரை இறுதி முடிவு எதனையும் எடுக்காதபோதிலும், தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் இது குறித்து எதிர்காலத்தில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/govt-considers-property-tax-amid-imf-demands-1784160034

