இலங்கை ஏற்றுமதிகள் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத வரிக்கு
பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை அதிகரிக்கும் திட்டம்
தமக்கு இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த
ஹுலங்கமுவ இதனை தெரிவித்தார்.
அமெரிக்கப் பொருட்கள்
வரி அழுத்தம் இருந்தபோதிலும், அமெரிக்காவுடன் நிலையான மற்றும் ஒத்துழைப்புடனான
வர்த்தக உறவுகளைப் பேணுவதற்கு இலங்கை தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது எனவும்
வலியுறுத்தினார்.

எனவே, அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதிலளிக்க அதேபோன்ற நடவடிக்கை எடுக்கும்
எண்ணம் இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை எனவும் அவர் கூறினார்.

