சீனாவிலிருந்து(china) அமெரிக்க(us) நிறுவனங்கள் வெளியேற இதுதான் சரியான நேரம் எனவும் எனவே அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறும் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (donald trump)அறிவித்துள்ளார்.
சீனா, அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதிகள் மீதான வரியை 84% ஆக உயர்த்துவதாக அறிவித்ததை அடுத்து அவர் முதலாவதாக வெளியிட்ட அறிவிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
உங்கள் நிறுவனத்தை அமெரிக்காவிற்கு நகர்த்த இது ஒரு சிறந்த நேரம்
இதன்படி சீனாவிலுள்ள அமெரிக்க நிறுவனங்களை அமெரிக்காவிற்கு திரும்புமாறு அறிவித்துள்ளார்.
சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் அவர் வெளியிட்ட பதிவில், “உங்கள் நிறுவனத்தை அமெரிக்காவிற்கு நகர்த்த இது ஒரு சிறந்த நேரம்.”
காத்திருக்க வேண்டாம், இப்போதே செய்யுங்கள்!”, என்று அவர் மேலும் பதிவிட்டுள்ளார்.