முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை புறக்கணித்த வளைகுடா நாடுகள்

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை (MRIA) பயன்படுத்துமாறு விடுக்கப்பட்ட
அழைப்பிற்கு முன்னணி வளைகுடா நாடுகளின் விமான நிறுவனங்கள் இதுவரை சாதகமான
பதிலளிக்கவில்லை என சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனிதா ருவான்
கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் செயல்பாட்டு சவால்களுக்கு மத்தியில் மத்தள விமான
நிலையத்தைப் பயன்படுத்துமாறு கோரப்பட்ட போதிலும், எந்தவொரு நிறுவனமும்
விருப்பம் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தரையிறக்கம் மற்றும் தரிப்பிடக் கட்டணங்கள்

முக்கிய வளைகுடா விமான நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை மத்தளவிற்கு மாற்றுவதில்
சிரமங்கள் உள்ளன.

ஏனெனில் இந்த விமான நிலையத்தினால் ஆண்டுக்கு சுமார் ஒரு மில்லியன் பயணிகளை
மட்டுமே கையாள முடியும்.

எரிபொருள் நிரப்புதல் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக தரையிறக்கம்
மற்றும் தரிப்பிடக் கட்டணங்கள் இலவசமாக வழங்கப்படும் என இலங்கை
அறிவித்திருந்தது.

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை புறக்கணித்த வளைகுடா நாடுகள் | Gulf Countries Not Interest Free Landing Sri Lanka

இருப்பினும், நிறுவனங்கள் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டனவே தவிர, ஆர்வம்
காட்டவில்லை.

வளைகுடா விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்காக இலங்கை வந்ததாக
வெளியான செய்திகளையும் பிரதி அமைச்சர் நிராகரித்துள்ளார்.

விமான போக்குவரத்து ஆய்வாளர் பென் ஸ்லாப்பிக் (Ben Schlappig) இது குறித்து
கருத்து தெரிவிக்கையில்: “கிழக்கு-மேற்கு வான்வழிப் பாதையில் மத்தள விமான
நிலையம் கொண்டுள்ள புவியியல் ரீதியான சாதகம் ஒரு நல்ல விடயம். இருப்பினும்,
தரைவழி கையாளுதல் (Ground handling), எரிபொருள் விநியோகம் மற்றும் விமான
ஊழியர்களுக்கான தங்குமிட வசதி போன்ற சவால்களுக்கு முதலில் தீர்வு காணப்பட
வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/gulf-countries-not-interest-free-landing-sri-lanka-1774843908

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.