கொழும்பில் (Colombo) சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கொழும்பு, கிரான்பாஸ் நாகலகம் வீதியில் சற்றுமுன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 9mm ரக கைத்துப்பாக்கியால் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர்.
இருவர் படுகாயம்
குறித்த சம்பவத்தில் 23 மற்றும் 27 வயதுடைய இருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் (National Hospital of Sri Lanka) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை கிரான்பாஸ் காவல்துறையினர் மற்றும் வடக்கு குற்றத்தடுப்பி பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.