யாழ்ப்பாணம் (Jaffna) – சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புன்னாலைக்கட்டுவன் வடக்கு
புன்னாலைக்கட்டுவன், ஜி.ஜி.பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து நேற்று (12) குறித்த கைக்குண்டு அடையாளம் காணப்பட்டது.
குறித்த காணியானது 1990ஆண் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டுவரை இராணுவ
கட்டுப்பாட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றம் உத்தரவு
இந்த நிலையில் குறித்த காணியை நேற்றையதினம் சுத்தம் செய்தவேளை கைக்குண்டு
இருப்பது அவதானிக்கப்பட்டதை அடுத்து சுன்னாகம் காவல்துறையினருக்கு
தெரியப்படுத்தப்பட்டது.
சுன்னாகம் காவல்துறையினர் குறித்த விடயத்தை மல்லாகம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு
சென்ற நிலையில் குறித்த கைக்குண்டினை மீட்டு செயலிழக்க செய்யுமாறு விசேட அதிரடிப்
படையினருக்கு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.