முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழிற்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி : பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பு

புதிய இணைப்பு

யாழ்.மானிப்பாய் தொகுதி, சண்டிலிப்பாய் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு
கூட்டத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் 6 மணிக்கு யாழ். யாழ்.மானிப்பாய் தொகுதி,
சண்டிலிப்பாய் வடக்கு, பிள்ளையார் கோவில் அருகாமையில் மக்கள் சந்திப்பு
கூட்டத்தில் கலந்துகொண்டார்.

குறித்த கூட்டத்தில் கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய
மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன்,
கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மூன்றாம் இணைப்பு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய சுழிபுரம் பகுதியில் மக்கள் சந்திப்பு
கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் யாழ். சுழிபுரம், வழக்கம்பரை
முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.

யாழிற்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி : பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பு | Harini Amarasuriya Visit To Jaffna Hindu College

குறித்த கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய
மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயசந்திரமூர்த்தி றஜீவன்,
சண்முகநாதன் ஶ்ரீபவானந்தராஜா, கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், பொதுமக்கள் என
பலர் கலந்துகொண்டுள்ளனர் 

இரண்டாம் இணைப்பு 

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதனையடுத்து இன்று மதியம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஆசிரியர் கலாசாலையில் புனரமைக்கப்பட்ட நூலகத்தை திறந்துவைத்த பின்னர் பிரதமர் அங்கு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

யாழிற்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி : பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பு | Harini Amarasuriya Visit To Jaffna Hindu College

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீபவானந்தராஜா, றஜீவன்
ஜெயச்சந்திரமூர்த்தி, ஆசிரியர் கலாசாலை அதிபர் லலீசன் மற்றும் கல்வி திணைக்கள
உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் இன்று பல்வேறு
நிகழ்வுகளிலும் பொதுமக்கள் சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

வடக்கிற்கு வருகை தந்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) இன்று (15) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்துக்கல்லூரி அதிபருடன் கலந்துரையாடிய அவர் பாடசாலை கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், மாணவர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு (Kopay Teacher’s College) விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் சந்திப்பு 

அதன் பின்னர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

யாழிற்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி : பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பு | Harini Amarasuriya Visit To Jaffna Hindu College

மேலும் இன்று (15) மாலை, சுழிபுரம், ஏழாலை மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளுக்கு சென்று மக்கள் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.

நாளை (16) கிளிநொச்சி (Kilinochchi) மற்றும் முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டங்களுக்கு பிரதமர் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

https://www.youtube.com/embed/Q3268vmg4mshttps://www.youtube.com/embed/XYmjnVUBw5g

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.