நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையை கருத்திற் கொண்டு நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலையானது இன்றும் மனித உடலால் உணரப்படும் அளவை விட அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்தநிலையில், நீரின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
எனவே, அன்றாட பயன்பாட்டிற்கு போதுமான நீரை சேமித்து, சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோாடு, நிலவும் வெப்பமான காலநிலையினால் பணியிடங்களில் உள்ளவர்கள் அதிகளவான நீரை பருக வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.