செங்கடலில் பயணித்த லைபீரியா (Liberia)மற்றும் பனாமா (Panama) நாட்டு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தகவலை இங்கிலாந்து (England) கடற்படையினர் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலினால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை என்பதுடன், இதனால் மீண்டும் செங்கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
கூட்டுப்படை
இந்த நிலையில், இஸ்ரேல் (Isreal) போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, செங்கடலில் தொடரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அத்துமீறல்களை தடுப்பதற்கு அமெரிக்கா (America) தலைமையில் ஒரு கூட்டுப்படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.