பெண்களுக்கு தன்னை அழகாக வைத்துகொள்வது என்பது மிகவும் பிடித்தமான ஒரு விடயமாக எப்போதும் காணப்படும்.
இதில் முகத்தை வெண்மையாக்குவது என்பது அதில் பிரதான விடயமாக காணப்படுகின்ற நிலையில், அதற்காக பலதரப்பட்ட விடயங்களை அவர்கள் மேற்கொள்வதுண்டு.
இந்தநிலையில், இவ்வாறான கடினமான விடயங்கள் அல்லாமல் இலகுவாக மற்றும் இயற்கையாக வாழைப்பழத்தை வைத்து முகத்தை எவ்வாறு வெண்மையாக்கலாம் என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
பழுத்த வாழைப்பழம்
முதலில் ஒரு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து அதை உரித்துக் கொள்ளவும்.

அதன் உள்ளே உள்ள வெள்ளைப் பகுதியை அகற்றி அதன் தோலை முகம் மற்றும் கழுத்தில் ஐந்து தொடக்கம் ஏழு நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.
பின்னர் அதை 15 நிமிடங்கள் விட்டுவிட்டு, பின்னர் சாதாரண நீரில் முகத்தைக் கழுவவும்.
“
இயற்கையான பளபளப்பு
உங்கள் சருமத்தை மேம்படுத்த வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தலாம்.

இது உங்கள் முகத்திற்கு இயற்கையான பளபளப்பை தந்து சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
மேலும், கருவளையங்கள் மற்றும் கறைகளைக் குறைத்து, கண்களுக்குக் கீழே உள்ள சருமத்தை தெளிவாக்கும் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

