மனைவியுடனான முரண்பாட்டை அடுத்து அவரை கணவர் வெட்டிக் கொன்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று (22) அதிகாலை 5.00 மணியளவில் இந்த பயங்கர சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.மாத்தளை(matale) – இரத்தோட்டை, கைகாவல இசுருகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாத்தளை வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள்
கொலை செய்யப்பட்ட மனைவி மற்றும் கொலையைச் செய்ததாகக் கூறப்படும் கணவர் இருவரும் மாத்தளை வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுக்கு இரு பிள்ளைகள் (மகள் 11 – மகன் 13) இருப்பதும் தெரியவந்துள்ளது.
காவல்துறையினரால் கைது
கொலைக்குப் பின்னர் மறைந்திருந்த சந்தேகநபரான கணவர், இரத்தோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இரத்தோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.