இலங்கையில் தற்போது நடைபெற்றுள்ள ஆட்சிமாற்றத்தை யார் கையகப்படுத்துவது என்பது தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கிடையில் கடும் போட்டி நிகழுவதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கையுடன் ஒரு தொடர்பை நீடித்துகொண்டே இருக்கின்றது.
இவ்வாறு கிடைக்கும் சிறிய சிறிய சந்தர்ப்பங்களிலும் இலங்கையுடனான தனது உறவை வலுப்படுத்த அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முயற்சித்துகொண்டே இருக்கின்றன” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அநுரவின் தற்போதைய ஆட்சி காலம், எதிர்நோக்கப்போகும் பொருளாதார நெருக்கடி, இலங்கையின் ஆட்சி மாற்றம் சர்வதேசத்தோடு நகரும் விதம் மற்றும் சர்வதேசத்தின் தாக்கம் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
https://www.youtube.com/embed/EihLTFSNBbo