இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது
இந்த நிலையில், கடந்த வாரத்தில் 846 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு (Colombo) மாவட்டத்திலிருந்து 269 டெங்கு நோயார்களும்,
கம்பஹா (Gampaha) மாவட்டத்திலிருந்து 146 டெங்கு நோயாளர்களும் , கண்டி (Kandy) மாவட்டத்திலிருந்து 93 டெங்கு நோயாளர்களும் இனங் காணப்பட்டுள்ளனர்.
டெங்கு நோயாளர்கள் அடையாளம்
இதேவேளை, கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் 28,239 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், மக்கள் மிகவும் அவதானமாக இல்லாத பட்சத்தில் அஜாக்கிரதையாக இருப்பார்களானால் திடீரென்று சிற்சில பகுதிகளில் நுளம்புகளின் பரம்பலின் அடிப்படையில் டெங்கு தொற்று சடுதியாக அதிகரிக்கும் என்றும் வைத்திய அதிகாரி வைத்தியர் நாகூர் ஆறிவ் (Nagoor Aarif) எச்சரித்துள்ளார்.