முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகிவிடும் – எச்சரிக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித்

இலங்கை (srilanka) – இந்தியா இடையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகிவிடும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் எச்சரித்துள்ளார்.

அத்துடன் தரைவழிப்பாலம் அமைக்கப்பட்டால் இலங்கையின் இறைமைக்கும் சுதந்திரத்திற்கும் ஆபத்து என்றும் மல்கம் ரஞ்சித் (Cardinal Malcolm Ranjith) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தென்னிந்தியாவிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் வந்து நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செய்தனர் என்பதற்கு எங்கள் வரலாறு முழுவதும் ஆதாரங்கள் உள்ளன.

வெளிநாட்டவர்களின் வேண்டுகோள்கள்

ஒவ்வொரு முறையும் சிங்கள மன்னர்கள் படைதிரட்டி போர்புரிந்து தென்னிந்திய மன்னர்களிடமிருந்து நிலங்களை விடுவிக்கவேண்டிய நிலை காணப்பட்டது என கர்தினால் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகிவிடும் - எச்சரிக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித் | India Sri Lanka Land Bridge Malcolm Ranjit Blame

தற்போது இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் தரைப்பாலம் ஒன்றை அமைக்கும் திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்கின்றது இதன்காரணமாக இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறும் என அவர் தெரிவித்துள்ளார்.

யாருக்கு பாலம் தேவை? இலங்கை மக்கள் விடுத்த வேண்டுகோள் காரணமாக இந்த திட்டம் குறித்து அவர்கள் ஆராயவில்லை வெளிநாட்டவர்களின் வேண்டுகோள்கள் காரணமாகவே ஆராய்கின்றனர் எனவும்மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

நன்மையானவையா தீமையானவையா

வெளிநாட்டிலிருந்து வரும் உத்தரவுகள் நன்மையானவையா தீமையானவையா என ஆராயாமல் அவை அனைத்தையும் நிறைவேற்றும்உறுதிப்பாட்டுடன் அரசாங்கம் உள்ளது.

இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகிவிடும் - எச்சரிக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித் | India Sri Lanka Land Bridge Malcolm Ranjit Blame

எங்களிற்கு நன்மையளிக்காத விடயத்தை நாங்கள் செய்யக்கூடாது இது குறித்து அவதானமாகயிருக்க வேண்டும், இல்லாவிட்டால் தற்போது காணப்படும் நிலைமையை விட இன்னமும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவோம் எங்கள் இறைமை சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எதனையும் செய்ய கூடாது எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.