முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிரிக்கெட் போட்டியொன்றில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட இந்திய பிரஜை! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கிரிக்கெட் போட்டியொன்றில் ஆட்ட நிர்ணயம் செய்யததை ஒப்புக்கொண்ட இந்திய பிரஜைக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று (27) நடைபெற்றபோது இந்த தீர்ப்பானது கண்டி (Kandy) மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில், 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற லெஜண்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுள்ளது.

ஆட்ட நிர்ணய வழக்கு

இதன்போது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவினரால் விளையாட்டுத் துறையில் முறைகேடுகளைத் தடுக்கும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிரிக்கெட் போட்டியொன்றில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட இந்திய பிரஜை! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Indian Citizen Admits To Cricket Match Fixing

அந்த போட்டியில் பஞ்சாப் ரோயல் அணிக்காக விளையாடிய இங்கிலாந்து (England) வீரர் மற்றும் நியூசிலாந்து (New Zealand) வீரர் ஒருவருக்கும் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட ஆலோசனை வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில், இந்திய பிரஜை ஒருவரை குற்றவாளியாகக் குறிப்பிட்டு, ஆட்ட நிர்ணயம் மற்றும் ஆட்ட நிர்ணய ஆலோசனை தொடர்பாக கண்டி மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

 கடூழிய தண்டனை

இது தொடர்பான வழக்கு நேற்றையதினம் இடம் பெற்றபோதே இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டியொன்றில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட இந்திய பிரஜை! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Indian Citizen Admits To Cricket Match Fixing

மேலும், கண்டி மேல் நீதிமன்ற நீதிபதியால் ஒரு குற்றச்சாட்டுக்கு 5.5 மில்லியன் ரூபா வீதம், 11 மில்லியன் ரூபாவும்,
மற்றைய குற்றச்சாட்டுக்கு 10 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட தலா 02 வருடங்கள் கடூழிய தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்