களுத்துறை(kalutara), கட்டுகுருந்த பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பயாகல காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
களுத்துறை கட்டுகுருந்த சனச மாவத்தையில் வசிக்கும் பத்தரமுல்ல கிராமத்தைச் சேர்ந்த அமித் பிரியதர்ஷன என்ற 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மர்மமான முறையில் கிடந்த சடலம்
வீடு ஒன்றில் மர்மமான முறையில் ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணை நடத்தியதில், வீட்டின் அறையில் தலைகீழாக சடலம் கிடந்தது.
உயிரிழந்தவரின் மார்பு மற்றும் வயிற்றில் ஆழமான காயங்கள் காணப்பட்டதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காவல்துறையினர் விசாரணை
இந்த கொலை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை பிரிவு குற்றத்தடுப்புப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் நீதவான் ஆகியோர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பயாகல காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.