இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை தடுப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறும், தேவையான உதவிகளை
வழங்கவும் கடற்றொழில் அமைச்சு தயாராக இருப்பதாக அமைச்சர் இராமலிங்கம்சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்டத்தின்
அபிவிருத்த்தி தொடர்பான கலந்துரையாடலைத் தொடர்ந்து. ஊடகங்கங்களுக்கு கருத்து
தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடற்படை, பொலிஸ்,
இராணுவம் உள்ளிட்டோரின் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

சட்டவிரோத தொழில் நடவடிக்கையால் எமது சொத்துக்கள் அழிக்கப்படுவதோடு எதிர்கால சந்ததிக்கு இல்லாது போகின்றது.
இந்த சட்டவிரோத தொழில் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில்
ஒருவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. கடற்படை மற்றும் ஏனைய துறைசார்ந்தவர்களோடு
விரிவாக பேசியிருக்கின்றோம். விரைவாக நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கடற்படையினருக்கு அறிவுறுத்தியிருக்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

