இந்திய (India) பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமளவில் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
இன்று (15) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இந்திய விஜயம்
குறித்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
இதேவேளை கடந்த டிசம்பர் மாதத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this
https://www.youtube.com/embed/S7XQWiQqoJk