இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை செல்ல திட்டமிட்டிருந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அல்ஜசீராவுக்கு அளித்த நேர்காணல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இலங்கையில் மோடியின் நெருக்கமான நண்பராக ரணில் விக்ரமசிங்க உள்ளார்.
ரணில் இந்தியாவிற்கு சென்றிருந்த போதும் மோடியை சந்தித்து பேசியிருந்தார்.
மேலும், இலங்கையில் ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டுமானால் ரணில் விக்ரமசிங்க ஊடாகவே அதனை மேற்கொள்ள முடியும் என மோடி நம்புகின்றார்.
இதனால், மேற்குலகம் மற்றும் அமெரிக்கா இணைந்து மோடிக்கு கொடுத்த ஒரு அதிர்ச்சி வைத்தியமாக அல்ஜசீரா நேர்காணலை பார்க்கலாம் என இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,