வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபராக ஜி.எம்.எச்.புத்திக்க
சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய, சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள்
பலருக்கு இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில்
குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்
வடக்கு மாகாண
சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக இருந்த திலக் தனபால
வடமத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி காவல்துறை தலைமையகம் மற்றும் வட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட
பிரதி காவல்துறை மா அதிபர் பதவிகளில் இருந்த ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன
வடக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை அதிபராக இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளார்.

