இஸ்ரேலிய வான்படை, இன்று மேற்குப் பகுதி ஈரானில் உள்ள ஒரு அடித்தள ஆயுதக் கிடங்கைக் குண்டுவீசி தகர்த்தியுள்ளது.
குறித்த தாக்குதலானது, IAF போர் விமானங்களை பயன்படுத்தி நடத்தப்பட்டதாக IDF பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்
ஈரானின் இந்த ஆயுத கிடங்கில் பல பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் மிசைல்கள் களஞ்சியமாக வைக்கப்பட்டதோடு, அவற்றை ஏவவும் பயன்படுத்தப்பட்டதாக IDF தெரிவித்துள்ளது.
ISRAEL HITS IRANIAN MISSILE BUNKER SHOWN IN PROPAGANDA VIDEO
The Israeli Air Force struck an underground missile facility in western Iran, targeting both the bunker and its launch systems.
The site had recently appeared in an Iranian propaganda video featuring top commanders… pic.twitter.com/vlL6c3Qyol
— Ahmad Algohbary (@AhmadAlgohbary) June 14, 2025
குறித்த கிடங்கு தொடர்பான காணொளியை ஈரான் வெளியிட்ட அதே நாளில் இஸ்ரேல் அதனை தாக்கி அழித்துள்ளது.
காணொளியில் இருந்த இருவர்
அத்துடன், அந்த காணொளியில் ஈரானின் ஆயுத படைகளின் தலைமை அதிகாரியான மொஹம்மது பாகிரி மற்றும் IRGC வான்படைத் தலைவர் அமீர் அலி ஹாஜிசாதேக் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
Iran posted this video to show the world how powerful they are.
We showed the world what happens when you mistake propaganda for strength.The Iranian Chief of Staff and Commander of the IRGC featured in this Iranian propaganda video have been eliminated and the site has been… pic.twitter.com/LyavG6W2Jk
— Israel Defense Forces (@IDF) June 14, 2025
இவர்கள் இருவரும் நேற்றையதினம் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழி தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், பிரச்சாரத்தை வலிமை என்று தவறாகப் புரிந்து கொள்ளும்போது என்ன நடக்கும் என்பதை தாங்கள் உலகுக்குக் காட்டியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

