எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ள
தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி இன்று (26) முற்பகல் ஒன்றில் இந்த
கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
குறித்த கட்சிகளின் முதலாவது சந்திப்பு கடந்த 23 ஆம் திகதி யாழ்ப்பாணம் –
இணுவில் பகுதியில் இடம்பெற்றிருந்த நிலையில் இன்று இரண்டாவது சந்திப்பு
இடம்பெற்றுள்ளது.
கட்சிகள்
இன்றை சந்திப்பில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ்த்
தேசிய கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழரசு கட்சி, சமத்துவ கட்சி ஆகிய
8 கட்சிகள் கலந்துகொண்டிருந்தனர்.
you may like this,
https://www.youtube.com/embed/Gl2V8R9Yu9I