நுகேகொடையில் நேற்றையதினம்(22) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பழிவாங்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டதாக தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த 6ஆம் திகதி படோவிட அசங்க எனும் போதைப் பொருள் வர்த்தகரின் ஆதரவாளர் ஒருவர் துப்பாக்கிச் பிரயோகமொன்றில் கொல்லப்பட்டிருந்தார்.
மேலதிக விசாரணை
குறித்த துப்பாக்கிப் பிரயோகத்துக்கு ஒத்தாசை வழங்கிய சந்தேகத்தின் பேரில் படோவிட அசங்க குழுவினரே நேற்றையதினம் மாலை துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை தற்போதைக்குத் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த சமந்த எனும் இளைஞன் தற்போதைக்கு களுபோவிலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

